முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொகாலி டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 499 ரன்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, மார்ச். 18 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொ காலியில் நடைபெற்று வரும் 3 -வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முத ல் இன்னிங்சில் 499 ரன்னில் ஆட்டம் இழந்தது. இந்திய அணியின் இன்னிங்சில் அறிமு க வீரரான ஷிகார் தவான் மற்றும் முர ளி விஜய் இருவரும் சதம் அடித்தனர். கோக்லி அரை சதம் எடுத்தார். தவான் இரட்டை சத வாய்ப்பை நழுவவிட்டார்.

பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில், 21 ஓவரில் 3 விக்கெட் இழப் பிற்கு 75 ரன்னை எடுத்து இருந்தது. 

ஆஸ்திரேலிய அணி வீரர்களான கோ வன், வார்னர் மற்றும் டி.ஸ்மித் ஆகிய 3 வீரர்களை புவனேஷ்வர் குமார் வீழ்த் தியது குறிப்பிடத்தக்கது. 

பார்டர் மற்றும் கவாஸ்கர் கோப்பைக் கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மொகாலி நகரில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தி ல் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 408 ரன்னை எடுத் தது. அந்த அணி தரப்பில், ஸ்டார்க் 99 ரன்னும், டி.ஸ்மித் 92 ரன்னும், கோவ ன் 86 ரன்னும், வார்னர் 71 ரன்னும், எடு த்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்தி ய அணி 132.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 499 ரன்னை எடுத்த து. இந்திய அணி தரப்பில், 2 வீரர்கள் சதமும், 1 வீரர் அரை சதமும் அடித்தனர். 

இந்தப் போட்டியில் அறிமுக வீரரான ஷிகார் தவான் 174 பந்தில் 187 ரன்னை எடுத்தார். இதில் 33 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் லியான் வீசிய பந்தில் கோவனிடம் கே ட்ச் கொடுத்து வெளியேறினார். 

தமிழக வீரரான விஜய் 317 பந்தில் 153 ரன் எடுத்தார். இதில் 19 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஸ்டார்க் வீசிய பந்தில் எல்.பி. டபிள்யு.வாகி வெளியேறினார். 

டெஸ்ட் போட்டியில் இது அவருக்கு 3-வது சதமாகும். 3-வது நாளன்று 83 ரன் னுடன் களத்தில் இருந்த அவர் நேற்று தொடர்ந்து ஆடி தனது சதத்தை பூர்த்தி செய்தார். 

மற்றொரு துவக்க வீரரான ஷிகார் தவான் இரட்டை சத வாய்ப்பை நழுவ விட்டார். 3 - வது நாள் 185 ரன்னுடன் ஆட்டம் இழக்கமால் இருந்த அவர் நே ற்று மேலும் 2 ரன் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். 

முரளி விஜயும், ஷிகார் தவானும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 289 ரன் சேர்த்தனர். விஜய், டெண்டுல்கருட ன் இணைந்து 3-வது விக்கெட்டிற்கு 92 ரன்னையும், தோனியுடன் இணைந்து 4-வது விக்கெட்டிற்கு 28 ரன்னையும் சே ர்த்தது குறிப்பிடத்க்கது. குமாரும்,கோ க்லியும் இணைந்து 8-வது விக்கெட்டிற் கு 61 ரன் சேர்த்தனர். 

பின்பு களம் இறங்கிய வீரர்களில் டெ ண்டுல்கர் மற்றும் கோக்லி இருவர் மட்டும் சிறிது தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்ட ம் இழந்தனர். 

கோக்லி 129 பந்தில் 67 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.  டெண்டுல்கர் 81 பந்தில் 37 ரன் எடுத் தார். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான சிட்டில் 71 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடு த்தார். தவிர, ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹென்ரிக்ஸ், லியான் மற்றும் டி. ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத் தனர். 

பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 21 ஓவரில் 3 விக்கெட் இழப் பிற்கு 75 ரன்னை எடுத்து இருந்தது. 

இதில் ஹியூக்ஸ் ஒருவர் மட்டும் தாக்கு ப் பிடித்து ஆடி அரை சதம் அடித்தார். அவர் 68 பந்தில் 53 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். 

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 25 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். ஆஸ்திரேலிய  அணி தற் போது 16 ரன் பின்தங்கி உள்ளது. அந்த அணி கைவசம் இன்னும் 7 விக்கெட் உள்ளது. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago