முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்பது எங்கள் உரிமை: நிதிஷ்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 18  - பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. அது எங்கள் உரிமை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.  டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியினர், பீகார் மக்கள் என்று லட்சக்கணக்கானோர் கூடினர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று ராம்லீலா மைதானத்தில் உரை நிகழ்த்தியதை கேட்கவே ஏராளமானோர் கூடினர். கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார் கூறுகையில், 

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுங்கள் என்று நாங்கள் ஒன்றும் பிச்சைக் கேட்கவில்லை. அது எங்கள் உரிமை. சிறப்பு அந்தஸ்து கோருவதன் மூலம் பீகார் பிற மாநிலங்களுக்கு எதிராக இல்லை. மத்திய அரசு கொஞ்சம் உதவினால் பீகாரும் முன்னேற்றகரமான மாநிலம் ஆகிவிடும். தொழில் நிறுவனங்கள் இல்லாததால் தான் பீகார் மக்கள் பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர். 

பீகார் மாநிலத்தை மத்திய அரசு முறையாக கவனிக்கவில்லை. உரிமையைக் கோரி இங்கு திறண்டுள்ள கூட்டம் பீகார் மக்களின் பலத்தை காட்டுகிறது. முன்பெல்லாம் டெல்லியில் வாழ்ந்த பீகார் மக்கள் கஷ்டப்பட்டனர். அவமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஏனென்றால் பீகார் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பீகார் மக்களின் பலத்தை டெல்லியில் உள்ள அதிகார வர்க்கத்தினர் உணர வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago