முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, மார்ச். 18 - மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஏழுமலையானை தரிசனம் செய்தார். நேற்று முன்தினம் ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைந்த ஷிண்டேவை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார். பின் அங்கிருந்து புறப்பட்டு முதலில் திருச்சானூர் பத்மாவதி தாயாரை வழிபட்டார். பத்மாவதி தாயாரின் கோயிலில் உள்ள கிருஷ்ண முக்கு மண்டபத்தில் நடந்த தாயாரின் ஊஞ்சல் சேவையில் கலந்து கொண்டார். பின் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஷிண்டேவுக்கு சிறப்பு பிரசாதங்களை வழங்கினார். பின்னர் திருமலையை அடைந்த அவர் ஏழுமலையானின் சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் மாட வீதியில் வலம் வரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை வழிபட்டார். 

சிறிது நேரத்துக்குப் பின் சிறப்பு தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். வழிபாடு முடிந்த பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிரவாதிகள் அப்சல் குரு, கசாப் ஆகியோரின் தூக்கு தண்டனைக்குப் பின் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. உளவுத் துறையின் பலத்த கண்காணிப்பையும் மீறி ஐதராபாத்தில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்தினர். நாட்டில் இம்மாதிரி குண்டுவெடிப்புகள் நடக்காமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். 

விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதி திருமலை என்று கூடிய விரைவில் அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறோம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முயற்சியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வளர்ச்சியடைந்து வருகிறது என்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஷிண்டே தங்கினார். நேற்று காலை அவர் மீண்டும் ஏழுமலையானை வழிபட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்