முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரால் இந்தியாவின் நிலை தாழ்ந்து விட்டது

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

பாட்னா, மார்ச். 18 - பலவீனமான பிரதமரால் இந்தியாவின் நிலை தாழ்ந்து விட்டது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறுகையில், 

ஒரு தேசமாக இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கடி சொல்லி வருகிறார். ஆனால் உண்மை என்னவெனில் பலவீனமான பிரதமரால் இந்தியாவின் நிலை தாழ்ந்து விட்டது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மிக சிறிய நாடான மாலத்தீவில் நமக்கு சவால் விடுகிறது. 

இந்திய ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவம் வெட்டி எடுத்து செல்கிறது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றுகிறது. இவை எல்லாம் நடந்த பிறகும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக இருக்கிறார். முன்பு போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய குவாத்ரோச்சி நாட்டை விட்டு தப்பினார். இப்போது இத்தாலிய கடற்படை வீரர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தவறான உத்தரவாதம் அளித்து இந்தியாவில் இருந்து தப்பி சென்று விட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தியாவின் தலையை நிமிர செய்துள்ளதா அல்லது தலையை குனிய வைத்துள்ளதா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 

இந்த அரசு உறுதியான முடிவு எடுக்காததால் இந்தியாவுக்கு வர வேண்டிய ரூ. 7 லட்சம் கோடி அன்னிய முதலீடு இன்னும் வந்து சேரவில்லை. முடிவெடுக்காமை என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சுபாவமாக உள்ளது. பல்வேறு பிரச்சினைகளில் கூட்டணி கட்சிகளே அவ்வப்போது காங்கிரசுடன் முறைத்துக் கொள்கின்றன என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago