முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்ட வறட்சி குறித்து குழுவினர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம்,மார்ச்,18 - ராமநாதபுரம் மாவட்ட வறட்சி பாதிப்பு குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் பருவமழை பொய்த்துபோனதால் கடந்த ஆண்டு நெல்விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னை தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்து மாவட்டமாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி வறட்சி பாதிப்புகளை மதிப்பீடு செய்ய நிதிஜ அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி இந்த குழுவினர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தனர். அவர்களை மாவட்ட எல்லையில் கலெக்டர் நந்தகுமார் வரவேற்றார். இதைத்தொடர்ந்து நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் முனுசாமி, வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சிபாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியாங்கோட்டை கிராமம், ஆர்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றியம் சோழந்தூர், வடவயல், நாரணமங்களம் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு உயர்மட்டக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் பயிர்பாதிப்பு குறித்து உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். உயர்மட்டக்குழுவினரிடம் மாவட்ட ககெல்டர் நந்தகுமார் கூறியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் உள்ள சாகுபடி பரப்பான ஒரு லட்சத்து 31 ஆயிரம் எக்டரில் விவசாயிகள் ஒருலட்சத்து 19ஆயிரம் எக்டரில் விவசாயம் செய்திருந்தனர். இவற்றில் ஒரு லட்சத்து 4ஆயிரம் எக்டர் நிலப்பரப்பில் 50சதவீதத்திற்கு மேல் நெல்விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாடானை பகுதியில் 45ஆயிரம் எக்டர் விவசாய விளைநிலங்களில் 38ஆயிரம் எக்டேர் விவசாய விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் வறட்சியை கருத்தில் கொண்டு 5ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர் உயர்மட்டக்குழுவினர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்;டர் அலுவலக  கூட்ட அரங்கில் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.  ஊயர்மட்ட குழுவினருடன் அமைச்சர் டாக்டர். சுந்தர்ராஜ், அரசு கூடுதல் முதன்மை செயலர், வருவாய் நிர்வாகம் ஸ்ரீதர், அரசு முதன்மைசெயலர், ஊரக வளர்ச்சித்துறை சங்கர், அரசு முதன்மை செயலர் வருவாய்த்துறை ராஜூவ்ரன்ஜன், அரசு செயலர் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நீர் விநியோகம் பனிந்திரரெட்டி, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் சத்தியபிரதாசாகு, வேளாண்மைத்துறை இயக்குநர் டாக்டர்.எம்.இராஜேந்திரன், கால்நடைபராமரிப்புத்துறை ஆணையர் டாக்டர்.ஆர்.பழனிச்சாமி, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆணிமுத்து, மாவட்ட வருவாய் அதிகாரி விஸ்வநாதன், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயபெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்