முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், மார்ச் 18 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 29ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

முருகப்பெருமானின் முதல்படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனித் திருவிழா ஆகும். அத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொட்ஙகியது. திருவிழா  தொடக்கமாக நேற்று முன்தினம் மாலை கோயில் கம்பத்தடி மண்படத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு யாகசசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சசர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். காலை 10.20 மணிக்கு  சிவாச்சசார்யார்கள் சுவாமிநாதன், ராஜா, ரமேஷ், செசல்லப்பா, சசண்முசுந்தரம் ஆகியோர், கொடிக்கம்பத்தில் பங்குனித் திருவிழா கொடியேற்றினர்.திருவிழா நம்பியார் சிவாச்சசார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செசய்யப்பட்டது. கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனைகள் நடந்தன. கோயில் துணை கமிஷனர் பச்சைசயப்பன், கண்காணிப்பாளர் பால லட்சுமி, பணியாளர்கள் பங்கு பெற்றனர்.

திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிழக்சிகளாக மார்ச் 22ல் ஐந்தாம் திருவிழாவில் கைப்பாரம் நிகழ்ச்சியும், மார்ச் 26ல் பங்குனி உத்திரம், மார்ச் 27ல் சூரசசம்ஹார லீலையும், மார்ச் 28 பகல் 3 மணிக்கு பச்சைச குதிரை ஓட்டம், இரவு 7 மணிக்கு பட்டாபிஷேகம், மார்ச் 29 காலை திருமண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மூலக்கரை சசந்திப்பு மண்டபத்தில், மதுரை மீனாட்சி அம்மன், செசாக்கநாதர், பிரியாவிடையை வரவேற்கும் நிகழ்ச்சியும்,  பகல் 12.45முதல்1 மணிக்குள் கோயில் ஆறுகால் பீடத்தில் திருக்கல்யாணம், இரவு ஏழு மணிக்கு 16கால் மண்டபத்தில், பெற்றோரிடம் சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை விடைபெறும் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 30ல் தேரோட்டம், மார்ச் 31ல் தீர்த்த உற்சசவம் நடக்கிறது.

திருவிழா நாட்களில் தினம் காலையில் சிம்மாசசனம், தங்கப்பல்லக்கு, சசப்பரம், வெள்ளி சிம்மாசசனம், மாலையில், தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், சேசஷம், வெள்ளி யானை, பச்சைசக் குதிரை, தங்க குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்