முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாணியம்பாடியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

வாணியம்பாடி மார்ச்.18 - வாணியம்பாடி அருகே ரூ.80 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.வாணியம்பாடி அம்பூர் பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் நகை கடை அதிபர். இவரது மகன் மணி (வயது 17). இங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்ரூ1 படித்து வந்தார். கடந்த 23ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை எனவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடினர்.

எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரமேஷீக்கு ஒருவர் போன் செய்தார். உங்கள் மகனை கடத்தி வைத்து இருக்கிறோம். ரூ.80 லட்சம் கொடுத்தால் தான் அவரை விடுதலை செய்வோம் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். இதை கேட்டு ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். மகன் கடத்தல் கும்பலில் சிக்கியதை எண்ணி துடித்தார். இது குறித்து அவர் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. மாணிக்கம், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடத்தப்பட்ட மாணவனை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாணவனை தேடி வந்தனர். ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய கடத்தல் காரர்கள் பேசிய செல்போன் நம்பர் மூலம் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது நகை கடை அதிபர் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஜெகன் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஜெகன் 8 பேர் கும்பலுடன் சேர்ந்து மாணவனை கடத்தியது தெரியவந்தது. மேலும் மாணவன் மணியை அடித்து கொலை செய்து மின்னுனூரில் உள்ள பாலத்தின் அடியில் பிணத்தை புதைத்தது தெரியவந்தது.

உடனடியாக வாணியம்பாடி டி.எஸ்.பி-. மாணிக்கம், டவுன் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் மின்னுனூருக்கு நேற்று காலை விரைந்து சென்றார்கள். அங்குள்ள பாலத்தின் அடியில் மாணவன் மணி பிணம் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டனர். மாணவனின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜெகன் (19), வாணியம்பாடியை சேர்ந்த ரியாஸ் அகமது (21), சிராஜ் (21), லோகேஷ் (20), மவுலிராஜேந்திரன் (21), அரவிந்த் (22), நவீன் (22), தரணி (19) ஆகியோரை கைது செய்தனர்.

ஜெகன் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.80 லட்சம் கேட்டு கடத்திய பிளஸ்ரூ1 மாணவனை கொலை செய்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago