முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிடர் - பழங்குடியின விடுதிக்கு சொந்த கட்டடங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.18 - 44 ஆதிதிராவிடர்- பழங்குடியின மாணவ விடுதிக்கு ரூ.35 கோடியே 4 லட்சத்தில் சொந்த கட்டடங்கள் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

`கல்விக்கு வறுமை விரோதி' என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், கல்வி  கற்பதற்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து ஆதிதிராவிடர் குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற  நோக்கத்துடன்,  அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிப்பு கட்டணம் செலுத்துதல், ஊக்கத் தொகை வழங்குதல், தங்கி பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தற்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 42 பழங்குடியினர் விடுதிகளும் இயங்கி வருகின்றன.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளது.  

எனவே அதிக அளவு மாணவ, மாணவியர் சேர்க்கையின் காரணமாக, வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாததால், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து விடுதிகளுக்கும் படிப்படியாக சொந்தக் கட்டடம் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டு வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 

44 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவியர்களின் விடுதிகளுக்கு 

35 கோடியே 4 லட்சம் ரூபாயில் சொந்தக் கட்டடம் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  இவற்றில் மலைப் பகுதிகளில் விடுதி ஒன்றுக்கு 88.53 லட்சம் பொய் என்ற வீதத்தில் 50 மாணவ/மாணவியர் தங்கக்கூடிய 3 விடுதிகளும், சமதளப் பகுதிகளில்  கட்டப்படும் விடுதி ஒன்றுக்கு 78.99 லட்சம் வீதத்தில் 50 மாணவ/மாணவியர் தங்கக்கூடிய 41  விடுதிகள் கட்டப்படும்.

இந்த விடுதிகள்  கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடம்பாறை, தொண்டாமுத்தூர், எஸ்.புங்கன்பாளையம், வால்பாறை, சின்னத்தடாகம் ஆகிய 5 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் களிமந்தை, பழநி ஆகிய 2 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், நாமகிரி பேட்டை ஆகிய 2 இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓக்கூர், வல்லத்திரா கோட்டை, பி.அழகாபுரி, மேலதானியம், ஓடுகம்பட்டு, கீரனூர் ஆகிய 6 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் நெய்மலை, மானூர், தலைவாசல் ஆகிய 

3  இடங்களிலும்,  சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, வேதியரேந்தல், சித்தலூர் ஆகிய 3 இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தில் ஓவேலி என்ற இடத்திலும், திருவள்ளூர்  மாவட்டத்தில் திருத்தணியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சி மற்றும் கலசப்பாக்கம் ஆகிய இடங்களிலும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத்திலும், திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவிலிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், துலுக்கார்பட்டி, ராதாபுரம், தென்மலை, விஸ்வநாதபேரி ஆகிய 5 இடங்களிலும், திருச்சி மாவட்டத்தில் பொய்கைப்பட்டி, வாளசிராமனி, கானகிளியநல்லூர் ஆகிய 

3 இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் வீரபாண்டி, செவலப்பாரை, செஞ்சி ஆகிய 

3 இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லாவி என்ற இடத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம், நாகல்கேணி, தையூர் ஆகிய 3 இடங்களிலும், வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு, அரக்கோணம் ஆகிய 2 இடங்களிலும், என மொத்தம் 

44 இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை, ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களிடையே கல்விப் பயிலுவதை மேலும் ஊக்குவிக்க வழிவகை செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago