முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

விழுப்புரம், மார்ச்.19 - விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்திரவிட்டார் நீதிபதி திருநீலபிரசாத். 

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 24.9.2011-ல் வழக்கு பதிவு செய்தனர். 

பின்னர் பொன்முடியின் வீடு, அவரது அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னையும், தனது மனைவி விசாலாட்சியையும் விடுவிக்க கோரி பொன்முடி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆஜர் ஆனார். ஆனால் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதில் அரசு வழக்கறிஞர் வாதிடும் போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இரண்டு பேரையும் விடுவிக்க கூடாது என்று வாதிட்டார். 

மேலும் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த மேலும் சில ஆவணங்கள் தேவைப்படுவதால் கால அவகாசம் கோரினர். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி திருநீல பிரசாத் வழக்கை வரும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago