முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபாரமான பீல்டிங்கால் வெற்றி - கேப்டன் டெண்டுல்கர்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஏப். 24 - இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அபாரமான பீல்டிங்கால் வெ ற்றி பெற்றோம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு - 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை வாங்க்டே மை தானத்தில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி யது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 48 பந்தில் 87 ரன் னும்(8 பவுண்டரி, 5 சிக்சர்), சைமண்ட்ஸ் 26 பந்தில் 31 ரன்னும் எடுத்த னர். பொலிஞ்சர் 2 விக்கெட் கைப்பற்றினார். 

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. பத்ரிநாத், ஹஸ்சே ஆகியோர் மட்டுமே பொறுப்புடன் ஆடி னார்கள். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பத்ரிநாத் 48 பந்தில் 71 ரன்னும் (7 பவு ண்டரி, 2 சிக்சர்), மைக் ஹஸ்சே 41 ரன்னும் எடுத்தனர். ஹர்பஜன் சிங் 18 ரன் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மலிங் கா 2 விக்கெட் எடுத்தார். 

டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் 4 -வது வெற்றியைப் பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 3 -வது தோல்வியைத் தழுவியது. 

நடப்பு சாம்பியனான சென்னை அணி ஏற்கனவே பஞ்சாப் மற்றும் கொச்சி அணிகளிடம்தோற்று இருந்தது. 4 புள்ளிகளுடன் சென்னை அணி தற்போது, 9 -வது இடத்தில் உள்ளது. 

இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் டெண்டு ல்கர் கூறியதாவது - இந்த ஆட்டத்தில் எங்களது பீல்டிங் நம்ப முடியா   த அளவுக்கு மிக அருமையாக இருந்தது. 

ரோகித் சர்மாவின் பேட்டிங்கும், ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சும் சிற ப்பாக இருந்தது. ஆனால் பீல்டிங் அதை விட சிறப்பாக இருந்தது என் று கருதுகிறேன். பீல்டிங் மூலம் நிறைய ரன்னைக் கட்டுப்படுத்தினோ           ம். பீல்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. 

10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்ததாக நினைத்தேன். என்றாலும் 165 ரன் இலக்கு என்பது நல்ல ஸ்கோர் தான். பந்து வீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக அமைந்ததால் வெற்றி பெற முடிந்தது. சில கே ட்சுகள் மிகவும் அபாரமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

பரபரப்பான இந்த ஆட்டத்தில் குறைந்த ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி நிருபர்களிடம் தெரிவித்தாவது - 

எங்களது பேட்டிங், பெளலிங் நன்றாகவே இருந்தது. ஆனால் பீல்டிங் கில் தான் வேறுபாடு ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் பீல்டிங் அபாரமாக இருந்தது. 

அவர்கள் 2 முக்கிய கேட்சுகளை (ரோகித் சர்மா, பொலார்டு) பிடித்த னர். ஒரு கட்டத்தில் ரன் ரேட் அதிகமாகி, சென்ற போது, விக்கெட்டு களும் சரிந்தன. இதனால் நாங்கள் இறுதிவரை போராட முடியாமல் போனது. 

பந்து வீச்சில் பலவீனம் இருப்பது உண்மைதான். பகுதி நேர பந்து வீச் சாளர்கள் ரன்களை அள்ளிக் கொடுத்து விட்டனர். ரெய்னாவின் முதல் ஸ்பெல் நன்றாக இருந்தது. 2 -வது ஸ்பெல்லில் ரன்களை வாரிக் கொ டுத்து விட்டார். இவ்வாறு தோனி கூறினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 -வது லீக் ஆட்டத்தில் புனே வாரியர் ஸ் அணியை 25 -ம் தேதி சந்திக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் இரவு 8 .00 மணிக்கு துவங்குகிறது. 

கேப்டன் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக கேப்டன் கில்கிறிஸ்ட் தலைமையிலான ஐதராபாத் டெக் கான் சார்ஜர்ஸ் அணியுடன் இன்று மோத இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்