முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட துணையாக இருப்போம்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருப்ர், மார்ச்.19 - ​தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதைப்போல மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார். திருப்ர் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் பாசறை எழுச்சி தின விழாபொதுக்கூட்டம் 15. வேலம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாசறை மாவட்ட செயலாளர் ஏ.எம்.சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யுவராஜ் சரவணன், மாவட்ட இணை செயலாளர் வி.எம்.கோகுல், வேலம்பாளையம் நகர பாசறை செயலாளர் தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். வேலம்பாளையம் நகர கழக செயலாளர் வி.கே.பி.மணி, பாசறை மாவட்ட துணைச் செயலாளர் ராயபுரம் பி.பரமராஜன், இணையச் செயலாளர் பி.ஏ .சித்ரா உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-​

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு  திருப்ர் மாநகர் மாவட்டத்தில் 11 கிளைகளுடன் இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை துவக்கப்பட்டது.பின்னர் படிப்படியாக கிளைகள் துவக்கப்பட்டன. கடந்த தி.மு.க.ஆட்சியில் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி தவித்த தமிழகத்தை மீட்க இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வைத்த கோரிக்கையை ஏற்று நீங்கள எல்லாம் அயராமல் பாடுபட்டு தேர்தல் பணியாற்றி கழகம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து முதல்வர் ஜெயலலிதா 3​வது முறையாக முதல்வர் பொறுப்பேற்க அயராது பாடுபட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளை பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்காக எந்த ஒரு திட்டமும் அறிவிக்கவில்லை. தமிழக மக்களும் அந்த 3 ஆண்டில் உன்னதமான திட்டங்களை பெறவில்லை. இலவசம் என்ற பெயரில் கருணாநிதி டி.வி.யை வழங்கி தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாழ மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தி வந்தார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி  24 மணி நேரத்தில் 20 மணி நேரம்  தமிழக மக்களுக்காக பாடுபடுகிறார்.

மத்திய அரசு  தமிழகத்திற்கு முறையாக வழங்கிய வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய் அளவை பாதியாக குறைத்துவிட்டனர். வருடத்திற்கு 12 கியாஸ்  சிலிண்டர் வழங்கி வந்ததை தற்போது 6 ஆக குறைத்து வழங்கி வருகிறார்கள். இப்படி பல்வேறு வகையில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது மத்திய அரசு. முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு பயன்படக் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை இந்தியாவில் மற்ற மாநில தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்து வெற்றி பெறுகின்றனர். தமிழக மக்களிடமிருந்து ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்று மந்திரி பதவிகளை அனுபவித்து வரும்  தி.மு.க., காங்கிரஸ்காரர்களும் வாயை திறப்பதில்லை, கொடுப்பதை தடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. தமிழத்தில் தற்போது நிலவும் மின்சார பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் கடந்த ஆட்சியாளர்களால் உருவானதாகும். முதல்வர் ஜெயலலிதா 2001 -​2006 ஆம் ஆண்டுகளில் தமிழத்தை ஆட்சி செய்த போது தமிழகம் மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாகவும், இந்தியாவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகவும், மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் மின் மிகை மாநிலமாக விளங்கியது. 

ஆனால் கடந்த 2006-​2011 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் எந்தவித திட்டத்தையும் போடாத காரணத்தால் இன்று தமிழகத்தல் கடுமையான மின்வெட்டு பிரச்சினை நிலவி வருகிறது. முதல்வர் ஜெயலலிதா மின்சார உற்பத்திக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இன்று மின்வெட்டு பிரச்சினையை படிப்படியாக குறைத்து வருகிறார். இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாத இறுதிக்குள் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினை முற்றிலும் நீக்கப்பட்டு தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. பாண்டிச்சேரி உள்பட தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு தேவையான நிதியையும், திட்டங்களையும் பெற முடியும்.கேட்கும் இடத்தில் இருந்து கொடுக்கும் இடத்திற்கு முதல்வர் ஜெயலலிதா செல்லும்போது, தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள பெற்றுள்ளது போல் இந்தியாவில உள்ள மக்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை பெறுவார்கள்.

எனவே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணையாக இருந்ததுபோல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை அகற்ற  இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை முதல்வர் ஜெயலலிதா உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். 

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் சக்தி கோதண்டம், திரைப்பட இயக்குனர் ஜெயபிரகாஷ், சிதம்பரம் கோ.ஜெயவேல், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வடக்கு தொகுதி செயலாளரும், 2​வது மண்டலத் தலைவருமான ஜெ.ஆர்.ஜான், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முதல் மண்டலத் தலைவருமான வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி, மாவட்ட அண்ணா தொழிற்ச்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் மார்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.ஸ்டீபன்ராஜ், தங்கமுத்து, டாக்டர் சீனியம்மாள்., மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் வெ.அய்யாசாமி, ஓன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், சார்பு அணி நிர்வாகிகள் சாகுல்ஹமீது, தேவராஜ்,  தம்பி மனோகரன், கருணாகரன், ஏ.எஸ்.கண்ணன், பி.பார்த்தீபன், சி.எஸ்.கண்ணபிரான்,

மாவட்ட நகர, ஒன்றிய பாசறை நிர்வாகிகள் மோகன் தம்பி, மயில்ராஜ், சுப்பு என்ற சுப்பிரமணி, எம்.கே.எம்.கணேஷ், ஏ.தங்கராஜ், பி.விஜயகுமார், ஜி.சந்திரசேகர்,.புகழேந்தி, பதி, செந்தில், லோகநாதன், பரமேஷ், சரவணன், முத்துகுமார், சந்துரு, குரு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பாசறை பொருளாளர் செந்தமிழ் அரசு நன்றி கோரினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago