முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி தூதரை நம்ப முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.19 - உத்திரவாதத்தை மீறிய இத்தாலி நாட்டு தூதரை நம்பமுடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்திருப்பதோடு அவர்,தூதரக நம்பிக்கையற்றவர் என்றும் சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள கடல் பகுதியில் மீன்படித்துக்கொண்டியிருந்த மீனவர்கள் மீது அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். இதுதொடர்பான வழக்கு கேரள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பெங்களூரில் வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக இத்தாலி சென்றுவிட்டு திரும்புவதாக அந்த 2 பேரும் உறுதிமொழி அளித்து சென்றனர். கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிவிட்டு திரும்பிவிட்டனர். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும். அதனால் இத்தாலி செல்ல அந்த இரண்டு பாதுகாவலர்களும் அனுமதி கோரினர். இதற்கு கேரள கோர்ட்டு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அவர்கள் அனுமதி கோரினர். அப்போது இந்தியாவுக்கான இத்தாலி நாட்டு தூதர் டேனியல் மான்சினி உத்தரவாதம் அளித்த பின்னர் அவர்கள் இருவரும் இத்தாலி செல்ல சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தது. ஆனால் இந்தத்தடவை அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு திரும்ப மறுத்துவிட்டனர். மேலும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசும் அறிவித்துவிட்டது. இதனால் இந்தியா-இத்தாலி இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தாலி நாட்டு தூதரை நாட்டை வெளியே செல்ல சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்தது. அவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. 

இந்தநிலையில் இதுதொடர்பான விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நடந்தது. அப்போது இத்தாலி நாட்டு தூதர் டேனியல் மான்சினி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் தூதர் என்ற தகுதியும் அவருக்கு இல்லை என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்