முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் நடுரோட்டில் வாலிபர் தீக்குளித்து சாவு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.19 - மதுரையில் வாலிபர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டார். இலங்கை பிரச்சினைக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இலங்கையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட  படம் வெளியானதில் இருந்து தமிழகம் முழுவதும்  இலங்கைக்கு எதிராக போராட்டங்கள் நடக்க தொடங்கின. மதுரையில் வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். மேலும் அனைத்து கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

   இந்த நிலையில் நேற்று இரவு  7.30 மணியளவில் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் 25வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றியவாறு வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் உடலில் தீயை வைத்துக்கொண்டார். இதில் சில மணித்துளிகளிலேயே அவர் அந்த இடத்திலேயே எரிந்து விழுந்தார். இது குறித்து 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வாலிபரை ஏற்றிக்கொண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் தான் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து நாம்  தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மதுரை அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

   இது குறித்து தகவல் அறிந்த செல்லூர் போலீசாரும், போலீஸ் உயர் அதிகாரிகளும் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர்

   தீக்குளித்தவர் தீயை வைத்துக்கொண்டு பெட்ரோல் பங்க்குக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் அவர் தீயில் கருகி விட்டார். தீயை வைத்துக்கொண்டு பெட்ரோல் பங்குக்குள் சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் பங்கும் தப்பியது. பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago