முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியாகி வெளிநாடு செல்லாமல் தடுக்க சி.பி.ஐ. நடவடிக்கை

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச் 19  - ஹெலிகாப்டர் பேர ஊழலில் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் முன்னாள் விமானப்படைத் தளபதி  எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 9 பேர், வெளிநாடு  தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக, சி.பி.ஐ. கண்காணிப்பு நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.  எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 9 பேர், எந்த விமான நிலையத்தில்  இருந்தும் வெளிநாடு தப்பிச் 

செல்லாமல் கண்காணிக்க  சி.பி.ஐ.  நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ.  வட்டாரங்கள் தெரிவிக்கையில், `குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விசாரணையில்  இருந்து தப்பிப்பதற்காக நாட்டை விட்டு  இருந்து தப்பிப்பதற்காக  நாட்டை விட்டு வெளியேறுவார்களோ என்று அஞ்சப்படும் நிலையில், தாங்கள் பின்பற்றும் வழக்கமான நடைமுறைதான்' இது என்று குறிப்பிட்டன. இத்தாலியின் அகஸ்டா  வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.  இது தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி தியாகி, அவரது உறவினர்கள் சஞ்சீவ் என்ற  ஜூலி, ராஜீவ் என்ற டாக்சா, சந்தீப் மற்றும் ஐரோப்பிய இடைத்தரகர்களான  கார்லோ கெரோசா, கிறிஸ்டியன் மிக்செல் உள்பட 13 பேரின் பெயர்கள் சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.  இவர்கள் மீது மோசடி, ஊழல், ஹெலிகாப்டர் பேரத்தில் குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. அமைப்பால் வழக்கு தொடரப்பட்ட முதல் விமானப்படைத் தளபதி தியாகி என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வழக்கு தொடர்பாக, தியாகியின் வீடு உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவரிடமும் இந்த முறைகேட்டில் சிக்கிய ஐ.டி.எஸ். இன்ஃபோடெக், ஏரோ மேட்ரிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளிடமும்  சிபிஐ  சமீபத்தில் விசாரணை நடத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்