முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முலாயம் சிங் பற்றி விமர்சனம்: பாராளுமன்றத்தில் அமளி

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்,19 முலாயம்சிங் பற்றி மத்திய அமைச்சர் செய்த விமர்சனத்தால் பாராளுமன்றத்தில் நேற்று அமளி ஏற்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவிற்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா குற்றஞ்சாட்டி இருந்தார். உத்திரப்பிரதேசம் மாநிலம் கோல்டா என்ற இடத்தில் உள்ள அவரது தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் வர்மா, முலாயம்சிங்கிற்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும் முலாயம்சிங் யாதவ் ஒரு ஊழல்வாதி என்றும் கொள்ளைக்காரர் என்றும் அவர் குற்றஞ்சாட்டி பேசினார். அத்தோடு நில்லாமல் மாயாவதியைக்காட்டிலும் இவர்தான் மிகப்பெரிய ஊழல்வாதி என்று கூறிய அவர் இது உத்திரப்பிரதேசத்தின் சாபக்கேடு என்றும் கூறினாராம். 

இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்ற லோக்சபையில் சமாஜ்வாடி எம்.பி.க்கள் எழுப்பி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த பிரச்சினையால் நேற்று பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் கடுமையாகவே நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்