முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது ஒருநாள்: தெ.ஆ. பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், மார்ச். 19 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 34 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில்  முன்னிலை பெற்று உள்ளது. 

தெ. ஆ. அணி தரப்பில், துவக்க வீரர் அம்லா மற்றும் கேப்டன் டிவில்லியர் ஸ் இருவரும் சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்க ளுக்கு பக்கபலமாக டூபிளிசெஸ், இங்  க்ராம் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆடினர். 

தெ. ஆ. மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையேயான 3-வது ஒரு நாள் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய தெ. ஆ. அணி பாக். பந்து வீச் சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னாக் குவித்தது. 

இறுதியில் தெ. ஆ. அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற் கு 343 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் சதம் அடித்தனர். 

கேப்டன் டிவில்லியர்ஸ் அதிகபட்சமா க, 108 பந்தில் 128 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் சயீத் அஜ்மல் வீசிய பந்தில் சோயிப் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

துவக்க வீரர் அம்லா 113 பந்தில் 122 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் வகாப் ரியாஸ் வீசிய பந்தில் கேப்டன் மிஸ்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 

டூபிளீசெஸ் 19 பந்தில் 45 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, இங்க்ராம் 17 ரன்னையும், ஸ்மித் 14 ரன்னையும் எடுத்தனர். 

பாக். அணி சார்பில் மொகமது இர்பா ன் 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, வகாப் ரியாஸ் 2 விக் கெட்டும், சயீத் அஜ்மல் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

பாக். அணி 344 ரன்னை எடுத்தால் வெ ற்றி பெறலாம் என்ற இலக்கை தெ. ஆ. அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 309 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 3 -வது ஒரு நாள் போட்டியில் தெ.ஆ. அணி 34 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

பாக். அணி தரப்பில் மூத்த ஆல்ரவுண்டரான சாகித் அப்ரிடி அதிரடியாக ஆடி 48 பந்தில் 88 ரன் எடுத்தார். இதில் 5 பவு ண்டரி மற்றும் 7 சிக்சர் அடக்கம். துவ க்க வீரர் மொகமது ஹபீஸ் 49 பந்தில் 57 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற் றும் 3 சிக்சர் அடக்கம். 

தவிர, கீப்பர் கம்ரன் அக்மல் 30 ரன்னையும், யூனிஸ்கான் 19 ரன்னையும், கேப் டன் மிஸ்பா உல் ஹக் 28 ரன்னையும், வகாப் ரியாஸ் 45 ரன்னும் எடுத்தனர். 

தெ. ஆ. அணி சார்பில், மெக்லாரன் 56 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். சாட்சோபே 74 ரன்னைக் கொடு த்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பீட்ட ர்சன் 2 விக்கெட்டும், ஸ்டெயின் மற்று ம் கிளைன்வெல்ட் தலா 1 விக்கெட்டு ம் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அம்லா தேர்வு செய்யப் பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்