முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் தடுப்பு மசோதா தாக்கல்: விவாதம் தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.20 - பாராளுமன்றத்தில் பாலியல் தடுப்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதமும் தொடங்கியது. 

பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் பாலியல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, பெண்கள் மீது ஆசிட் ஊற்றுவது, பெண்களுக்கெதிரான குற்றங்களை கண்டு மகிழ்வது போன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை அதாவது அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை, பாலியல் பலாத்காரத்தால் பெண்கள் மரணமடைந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது உள்பட கடும் தண்டனை கிடைக்கும் வகையில் பாலியல் தடுப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு திருத்த மசோதா நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஜனாதிபதி பிறப்பித்த அவசர சட்டத்தை திரும்பப்பெறும் வகையில் இந்திய கிரிமினல் சட்டத்திருத்த மசோதா 2003-ஐ நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு பலியானதையொட்டி பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் விதத்தில் இந்த திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதாவானது இந்திய குற்றவியல் சட்டம், இந்திய கிரிமினல் நடைமுறை சட்டம், இந்திய சான்றுகள் சட்டம், செக்ஸ் குற்றங்களில் இருந்து சிறுவர்களை காப்பாற்றும் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரவும் கோருகிறது. 

இந்த மசோதாவுக்கு அனைத்துக்கட்சியினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் ஷிண்டே கூறினார். கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி 6 பேர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான மருத்துவ மாணவியை கெளரவிப்போம். இந்த மாதிரியான கொடூரத்தன்மையான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று சமூதாய மக்களிடத்தில் இருந்து உறுதியான உரத்த குரல் எழும்பியுள்ளது. இந்த மசோதாவானது சட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்கும் என்றும் அமைச்சர் ஷிண்டே கூறினார். 

இந்த மசோதா மூலம் பெண்கள் மீது ஆசிட் வீசுவதற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவும் தன்னை தாக்குபவர்களுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் பெண்களுக்கு உரிமை என்றும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்