முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெனிவா சென்ற சீமானுக்கு உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

ஜெனிவா, மார்ச். 20 - ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானுக்கு சுவிஸ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் சுவிஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு ஈ்ழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி பேசுவதற்காக சென்றுள்ள சீமான் அங்கிருந்து ஜெனீவா சென்றார். அவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் தடா சந்திரசேகரும் சென்றுள்ளார். 

சீமானுக்கு ஜெனிவா விமான நிலையத்தில் திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான சுவிஸ் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் மலர்ச் செண்டும் தமிழ் ்ஈழ தேசியகொடி வழங்கி வரவேற்றனர். 22 ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஜெனீவா நகரில் நடைபெறும் கவன ்ஈர்ப்பு நிகழ்ச்சியிலும் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்