முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் காங்கிரசார் கருணாநிதி கொடும் பாவி எரிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.20 - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகியதை காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது கருணாநிதி உருவ பொம்மையை எரித்தனர். கடந்த 2004, 2009 ஆண்டுகளில் பாராளுமன்ற  தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையெடுத்து கூட்டணியில் தி.மு.க இணைந்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் - தி.மு.க இடையிலான உறவில் கடந்த 9 ஆண்டுகளில் பல தடவை  உரசல்கள் ஏற்பட்டாலும் கூட்டணியில் இருந்து தி.மு.க  விலகாமலேயே நீடித்து வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்த  நாளிலும் கூட தி.மு.க அமைதியாகவே இருந்தது. கூட்டணியிலிருந்து அது விலகவில்லை. இந்த நிலையில் இலங்கை தமிழர் பிரச்சனையில்  காங்கிரஸ் - தி.மு.க இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது கூட்டணியிலிருந்து விலகிவிட்டது.காங்கிரஸ்  கட்சி கடைசி நிமிடத்தில் கருணாநிதியை சமரசம் செய்து கூட்டணியில் நீடிக்க செய்து விடலாம் என்று திட்டமிட்டது. இதற்காக 3 மத்திய அமைச்சர்கள், கருணாநிதியை சந்தித்து பேசினார்கள்.இதை தொடர்ந்தே  ஐக்கிய முற்போக்கு  கூட்டணியில் இருந்து விலகுவதாக வேகமாக கருணாநிதி அறிவித்தார். நேற்று காலை 11 மணிக்கு அறிவாலயத்தில் நடந்த நிருபர்கள் கூட்டத்தின் போது தி.மு.க விலகல் முடிவை அவர்  அதிகாரப்பூர்வ அறிவித்தார். கருணாநிதியின் அறிவிப்பையடுத்து சென்னையில் காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவன் வாயிலில் தி.மு.க வினர் ரகளையில் ஈடுபட்டனர்.இதைப்பார்த்த இளைஞர் காங்கிரசார் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.பின்னர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் சத்தியமூர்த்தி பவனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்