முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகவான் சத்ய சாய் பாபா மரணம் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.- 25 - பகவான் சத்ய சாய் பாபா மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்,சோனியா காந்தி, எல்.கே. அத்வானி உள்பட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.  புட்டப்பர்த்தி பகவான் சத்ய சாய் பாபா நேற்றுக்காலை 7-14 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். கோடான கோடி பக்தர்களின் அன்புக்கு பாத்திரமான ஆனமீக தலைவர் சத்ய சாய்பாபா மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி மத்திய அமைச்சர்கள் விலாஸ் ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே  உள்பட ஏராளமான தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சத்ய சாய் பாபாவின் மரணமானது இந்த உலகத்திற்கே பெரும் இழப்பாகும். அவருடைய நற்செயல்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு சிறந்த சமூக சேவகரும் ஆன்மீக தலைவருமான சத்ய சாய் பாபாவை நாம் இழந்திருக்கிறோம். சமூக நலத்திற்கு அவர் செய்துள்ள சேவையை அளவிட முடியாது என்று மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
சத்ய சாய் பாபா, ஆண்மீகத்தின் ஆதாரமாக விளங்கினார். அவருடைய பக்தர்களுக்கு ஒரு விளக்காய் வழி காட்டி வந்தார். பகவான் மரணம் அடைந்திருப்பது எல்லோருக்கும் இழப்பாகும். அவர் மருத்துவதுறை உள்பட அனைத்து துறையிலும் இலவசமாக சேவை செய்ததில் ஏராளமான பக்தர்கள் பெரும் பலனை அடைந்துள்ளனர் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஆந்திர கவர்னர் ஈ.எஸ்.எல். நரசிம்மன், முதல்வர் என் கிரண் குமார் ரெட்டி ஆகியோர் புட்டப்பர்த்தி சென்று சாய் பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தனது பணிகளை நிறுத்திவிட்டு புட்டப்பர்த்தி சென்று சாய் பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்