முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் புதுவை கல்வி அமைச்சர் வழக்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

விழுப்புரம், மார்ச்.20 - போலி ஆவணம் தயாரித்து அதை பயன்படுத்தி 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் வழக்கு விசாரணையை வரும் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆவடி தியாகராஜன் உத்தரவிட்டார். தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் வகுப்பு தனித்தேர்வு நடைபெற்றது. திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளை புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் எழுதினார். அத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. 

இது குறித்து விழுப்புரம் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

இந்த சம்பவம் குறித்து 56 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரிதா, போலி ஆவணம் தயார் செய்ததாகவும், அதை பயன்படுத்தி தேர்வு எழுதி முறைகேடு செய்த முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மற்றும் அதற்கு துணை போன 3 பேருக்கும் தலா இரண்டாண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். 

இந்த நிலையில் முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மனு தாக்கல் செய்தார். அதுபோல ஆதவன் மற்றும் ரஜினிகாந்தும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆஜராகாததால் அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து இதன் மீதான விசாரணையை வரும் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆவடி தியாகராஜன் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago