முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு பேச்சு: முலாயம் சிங்கிடம் சோனியா கெஞ்சல்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.21 - சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட போதிலும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முலாயம்சிங் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன சோனியா காந்தி முலாயம் சிங்கிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சத்தொடங்கிவிட்டார். வர்மாவை ராஜினாமா செய்யும்படி கேட்காதீர்கள். அந்த கோரிக்கையை விட்டுவிடுங்கள் என்று அவர் கெஞ்சினாராம். 

காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருப்பவர் வேணி பிரசாத் வர்மா, இவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது முலாயம் சிங்கை தாக்கி பேசினார். முலாயம்சிங்கிற்கு தீவிரவாதிகள் தொடர்பு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இவரது இந்த பேச்சால் சமாஜ்வாடி கட்சியினர் கொதித்தெழுந்து பாராளுமன்றத்தில் எழுப்பினர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. உடனே காங்கிரஸ் மேலிடம் அவருக்கு அறிவுரை கூறியது. இனிமேல் பேசும்போது கவனமாக பேசுங்கள் என்று வர்மாவுக்கு காங்கிரஸ் அறிவுரை கூறியது. முன்னதாக இதே பிரச்சினையை வர்மாவிடம் கேட்டபோது முலாயம்சிங்கா என்னை மந்திரியாக நியமித்தார். அவர் யார் என்னை ராஜினாமா செய்யச்சொல்ல. நான் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறினாராம். இந்தநிலையில் திடீரென்று பல்டி அடித்து அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் முலாயம்சிங் அதை விடுவதாக இல்லை. ஆரம்பத்தில் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட முலாயம்சிங், இப்போது மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி விட்ட நிலையில் இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு வர்மாவை நீக்கும்படி போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் அரண்டுபோன சோனியா, முலாயம்சிங்கிடம் கையெடுத்து கும்பிட்டு வர்மாவை ராஜினாமா செய்யும்படி கேட்காதீர்கள், அந்த கோரிக்கையை விட்டுவிடுங்கள் என்று பாராளுமன்றத்திலேயே கெஞ்சினாராம். ஆனால் வர்மாவின் பேச்சுக்கு லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையை உரிமைக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த விஷயத்தில் முலாயம்சிங்குடன் பா.ஜ.க.வும் கைகோர்த்துக்கொண்டதை பார்த்த சோனியா மிரண்டே போனார். உடனே முலாயம்சிங்கிடம் போய் மேற்கண்டவாறு கெஞ்சினாராம். இத்தகவலை சமாஜ்வாடி வட்டாரங்கள் தெரிவித்தன. மற்ற பா.ஜ.க.தலைவர்களும் முலாயம்சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அரண்டுபோன வர்மா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பகிரங்கமாக தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தாராம். இதனால் பிரச்சினை முடிந்துவிட்டது என்கிறது காங்கிரஸ். தி.மு.க. விலகிவிட்ட நிலையில் இனி மாயாவதியும் முலாயம்சிங்கும் என்ன கேட்டாலும் எதைக்கேட்டாலும் அதற்கு தகுந்தபடி பிரதமரும் சோனியாவும் ஆடித்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்