முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் குண்டுவெடிப்பு: தகவல் தருவோருக்கு ரூ.10 லட்சம்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், மார்ச். 21 - ஐதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் தருவோருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 21 ம் தேதி ஐதராபாத் திலக் நகரில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் தருவோர் இ மெயில் அல்லது தொலைபேசி மூலமாகவோ இல்லையென்றால் தபால் மூலமோ தெரிவிக்கலாம் என்று என்.ஐ.ஏ. இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தருவோர் பற்றிய ரகசியம் காக்கப்படும். தகவல் தருவோருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி தரப்படும். ஐதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. ஆந்திர பிரதேச அரசும் குண்டு வெடிப்பு தொடர்பான தகவல்களை தருவோருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago