முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சினை: பாராளுமன்றத்தில் கூச்சல்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.21 - இலங்கை தமிழர் பிரச்சினையை நேற்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வினரும் தி.மு.க.வினரும் எழுப்பியதால் சபையில் அமளி ஏற்பட்டது. இதேபோல் மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியதாலும் சபை நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன. 

லோக்சபையில் சமாஜ்வாடி எம்.பி.க்கள் வர்மா ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார்கள். முலாயம் சிங்கை அவதூறாக பேசிய வர்மா விலக வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இதனால் சபையில் அமளி ஏற்படவே நண்பகல் வரை சபையை ஒத்திவைத்தார் சபாநாயர் மீராகுமார். ராஜ்யசபையிலும் இதேகாட்சிகள் அரங்கேறின. அமைதியை ஏற்படுத்த சபை தலைவர் அன்சாரி எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியாமல் போகவே சபையை ஒத்திவைத்துவிட்டு சென்றார் அன்சாரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்