முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். - காம்பீர் சில ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 21 - இந்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டியில் முதல் ஒரு சில ஆட்டங்களில் கொல் கத்தா கேப்டனான கெளதம் காம்பீர் விளையாட மாட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ. பி.எல். போட்டியில் நடப்பு சாம்பி ய ன் அணியாகும். இந்த அணியின் கேப் டனாக டெல்லி வீரர் கெளதம் காம்பீர் இருந்து வருகிறார். 

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரே லிய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 

இதன் 4 -வது டெஸ்டில் காயம் அடைந்த துவக்க வீரர் ஷிகார் தவானுக்குப் பதிலாக காம்பீரை களம் இறக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையே 3 - வது டெஸ்ட் மொ காலியில் நடந்தது. இதில் அறிமுகமா  ன ஷிகார் தவான் முதல் இன்னிங்சில் 185 ரன் அடித்து அசத்தினார். அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் காம்பீருக்கு ரத்த சோத னை எடுக்கப்பட்டதில் மஞ்சட்காமா லை இருப்பது தெரிய வந்தது. இதனால் காம்பீர் டெஸ்ட் மற்றும் ஐ. பி.எல். போட்டியின் முதல் சில ஆட்டங்களில் ஆட முடியாது. 

காம்பீரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஒரு சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுரை அளித்து உள்ளனர். 

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்ப ட முடியாது. அவருக்குப் பதிலாக தெ. ஆ. ஆல்ரவுண்டரான ஜாக்ஸ் காலிஸ் அல்லது நியூசிலாந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான பிரண்டன் மெக்குல் லம் இருவரில் ஒருவர் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐ.பி.எல். -2 போட்டியில் ஏற்கனவே மெக்குல்லம் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கினார். இந்தத் தொடரி ல் அந்த அணி மோசமான தோல்வி அடைந்து கடைசி இடத்திற்கு தள்ளப் பட்டது. 

தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டரான ஜாக்ஸ் காலிஸ் தற்போது காயம் அடைந்து சிகிட்சை பெற்று வருகிறார். எனவே அவர் உடற்தகுதி பெறுவாரா என்பது கேள்விக் குறியாக உள்ளது. 

கொல்கத்தா அணிக்கு தலைமை தாங் கும் அளவிற்கு வேறு எந்த வீரரும் தகு தியாக இல்லை. எனவே மேற்படி 2 வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் கேப்ட னாக வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்