முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., அரசை வெளியில் இருந்து ஆதரிப்போம்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.21 - தி.மு.க. வை சேர்ந்த 5 மத்திய அமைச்சர்களும் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதற்கான கடிதங்களையும் சமர்ப்பித்தனர். மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, நெப்போலியன், ஜெகதட் ரட்சகன், காந்தி செல்வன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஆகிய 5 அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. விலகுவதாக அக்கட்சி தலைவர் கருணாநிதி நேற்றுமுன்தினம் அறிவித்தார். கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்ததையடுத்து மேற்கண்ட 5 அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆனாலும் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக்கூறுகிறார்கள். காரணம் 22 எம்.பி.க்களை கொண்ட சமாஜ்வாடி கட்சி, 21 எம்.பி.க்களை கொண்ட மாயாவதி கட்சி ஆகிய கட்சிகள் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். இதை மாயாவதியும் உறுதிப்படுத்தியுள்ளார். நாங்கள் மத்திய அரசை வெளியில் இருந்து தொடர்ந்து ஆதரிப்போம். ஆனால் அரசில் அங்கம் வகிக்கமாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார். இதையடுத்து ஸ்திரமாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இந்த அரசு நொண்டி வாத்து அரசு அல்ல என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஒரே நாளில் மனதை ஏன் மாற்றிக்கொண்டார் என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை. 18-ம் தேதி இரவு அவர் பேசியதற்கும் 19-ம் தேதி காலையில் அவர் அறிவித்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவர் எதனால் இப்படி மாறினார் என்பது புரியவில்லை என்று வியப்போடு குறிப்பிட்டார் சிதம்பரம். இந்த அரசு முற்றிலும் ஸ்திரமாக உள்ளது. இது நொண்டி அரசு அல்ல என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் குறிப்பிட்டார். அரசுக்கு முழு மெஜாரிட்டி உள்ளது. எங்களுக்கு யாரும் சவால் விட முடியாது என்றும் கமல்நாத் குறிப்பிட்டார். மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகிவிட்டதால் இனி காங்கிரஸ் அரசு முலாயம் சிங் யாதவையும் மாயாவதியையும் நம்பித்தான் ஆக வேண்டும். இருவரில் ஒருவர் கைவிட்டாலும் அரசு கவிழ்ந்துவிடும். ஆனால் அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று அடித்துக்கூறுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago