முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.15 ஆயிரம் கோடி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச் 22  - உள்நாட்டு ராணுவ உற்பத்தியை  ஊக்குவிக்க  ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும்  என மத்திய பாதுகாப்பு  அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து  அந்த அமைச்சகம் புதன்கிழமை  தெரிவித்ததாவது: நாட்டின் ராணுவ வலிமையை அதிகரித்துக்கொள்ள வேண்டிய  அவசியமான  காலகட்டத்தில்  இருக்கிறோம்.  அதனால் ஆயுதத் 

தொழிற்சாலைகளுக்கான  அமைப்பின் ஆலோசனையின் பேரில் நம்முடைய ராணுவ உற்பத்திக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்யவுள்ளோம். நமக்குத் தேவையான  ஆயுதங்கள், தளவாடப் பொருள்கள் கருவிகள் போன்றவற்றை வெளிநாடுகளில்  இருந்தும்  இறக்குமதி செய்து வருகிறோம்.  அப்படி செய்யும்போது  ஊழல், லஞ்சம் போன்ற பல பிரச்னைகள் எழுகின்றன.  அண்மைக் கால சம்பவங்கள்  இதை உறுதிப்படுத்தியுள்ளன.  அதனால் உள்நாட்டு  ராணுவ உற்பத்தியை  மிகப்பெரிய  அளவில்  ஊக்குவிக்க  அரசு முடிவெடுத்திருக்கிறது.   அதற்காக  வரும் 12​ - ஆம் ஙீஐந்தாண்டுத் திட்டத்தில்  ரூ.15,000 கோடியை ஒதுக்கீடு  செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் உள்நாட்டிலேயே  மேம்பட்ட  தொழில்  நுட்பத்துடன் நவீன ராணுவத் தொழிற்சாலைகளை கட்டமைக்க முடியும்.  முதல் கட்டமாக  155எம்எம் துப்பாக்கிகள், டி-90, டி-72 ரக பீரங்கி   டாங்குகள், 155 எம் எம் ஹோவிட்சர்  ரக ஏவுகணை வாகன பீரங்கிகள், போர்க்  கவச வாகனங்கள், நவீன இயந்திரங்கள்  போன்றவற்றைத் தயாரிக்க  தொழிற்சாலைகள்  அமைக்கப்படும்.  இவை தவிர, 130 எம்எம், எம்46, 155 எம்எம் 45 கேலிபர், 155 எம்எம் 52 கேலிபர் ரக துப்பாக்கிகளையும்  போர்க் கருவிகளையும்  தயாரிக்கும்  தொழிற்சாலைகளை உருவாக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது என 

பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.   ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம் நாட்டில்  பெரிய அளவில் பிரச்னையை  ஏற்படுத்தியதே உள்நாட்டு  ராணுவ உற்பத்திக்கு  முக்கியத்துவம் அளிக்கக் காரணம்  எனவும்  பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் 

தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்