முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீருக்குள் இருந்து தாக்கும் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

விசாகப்பட்டினம், மார்ச் 22 - நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாய்ந்து இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட  பிரமோஸ் ஏவுகணையை, இந்தியா புதன்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது. விசாகப்பட்டினம்  அருகே பான்டூன்  பகுதியில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து  290 கி.மீ. தொலைவு 

சென்று தாக்கும் பிரமோஸ் ஏவுகணை  புதன்கிழமை  வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 290 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்ட, ஒலியை  விட வேகமாகச் செல்லும்  ஏவுகணையைக் கொண்டுள்ள  முதல் நாடு  என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது குறித்து பிரமோஸ் திட்ட தலைவர் ஏ.சிவதாணு பிள்ளை கூறியதாவது:-நீருக்கடியில்  இருந்து 290 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக சென்று இலக்கைத் தாக்கும்  சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது உலகிலேயே  இதுதான் முதல்முறை  இப்பரிசோதனையில்  ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது. இதன்மூலம் நீர்மூழ்கிக் கப்பலில்  பொருத்தப்படுவதற்கு பிரமோஸ் முழு அளவில் தயாராக  உள்ளது.  உலகளவில் மிக வலிமையான  ஆயுதங்களுள்  இதுவும் ஒன்று என்றார். பிரமோஸ் ஏற்கனவே தரை மற்றும் கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப்பட்டு, தரைப்படை மற்றும் கடற்படைகளில் இணைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றதற்காக  பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை  (டி.ஆர்டிஒ) அதிகாரிகளுக்கும் இத்திட்டத்தில் இணைந்து செயலாற்றிய ரஷிய விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்