முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா மாநில கவர்னராக ஜமீர் பதவியேற்றார்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வரம், மார்ச்.22 - ஒடிசா மாநில கவர்னராக செனாயன்பா சுபடோஷி ஜமீர் நேற்று  பதவி ஏற்றுக்கொண்டார். பிரபலமான காங்கிரஸ் தலைவரான ஜமீர் இதற்கு முன்பு மகாராஷ்டிரா, கோவா மாநில கவர்னராகவும், நாகலாந்து மாநில முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். இவரது வயது 82. ராஜ்பவனில் கவர்னர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஜமீருக்கு ஒடிசா மாநில ஹைகோர்ட்டு நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒடிசா மாநில கவர்னராக பதவி வகித்து வந்த முரளீதர் சந்திரகாந்த் பண்டாரேயின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம்தேதியுடன் முடிவடைந்தது. ஆயினும் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார். தற்போது ஜமீர் அங்கு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகலாந்து மாநிலத்தை நிர்ணயித்த ஜமீர், அந்த மாநில முதல் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

1961-ம் ஆண்டு இவர் எம்.பி. ஆனார். பின்னர் ஜவஹர்லால் நேரு இவரை பாராளுமன்ற செயலாளராக நியமித்தார். பின்னர் இவர் மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நல்வாழ்வு, ரயில்வே, கூட்டுறவு, உணவு, விவசாயம் ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

கவர்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்துகொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்