முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத் தகராறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 22 - குடும்பத் தகராறு வழக்குகளில் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் மூலம் தீர்வு காண்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடுத்தார். பின்னர் அவர்கள் சமரசமாகி விட்டனர். அதை தொடர்ந்து வழக்கு ரத்து செய்யக் கோரி அந்த மாநில ஐகோர்ட்டை அந்தப் பெண் நாடினார். ஐகோர்ட் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. 

இதை எதிர்த்து அந்தப் பெண் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து மத்திய பிரதேச ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்தும், அந்தப் பெண் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடுத்த வழக்கை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது, 

சட்டப்படி நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பதை விட சம்பந்தப்பட்ட தரப்பினர் இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து சமரச தீர்வு கண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால் அதை ஊக்குவிக்க வேண்டும். குடும்பத் தகராறு வழக்குகளில் நீதியை நிலைநாட்டுவதற்கு இதை செய்வதற்கு நீதிமன்றம் பெரிதாக தயங்கக் கூடாது. சம்பந்தப்பட்ட தரப்பினர் சமரசமாக போய் விட்டால் அது தொடர்பான வழக்கினை ரத்து செய்வதற்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 482 வழங்கியுள்ள அதிகாரத்தை ஐகோர்ட்டுகள் பயன்படுத்த வேண்டும். 

சமீப காலமாக இப்படி கோபத்தின் வெளிப்பாடாக குடும்பத் தகராறுகள் அதிகரித்து வருகின்றன. திருமண பந்தம் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தம்பதியரின் நலனை முன்னிட்டு அவர்கள் வாழ்க்கையை சுமூகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். குடும்பத் தகராறுகளில் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நீதிமன்றங்களுக்கு வெளியே சமரச தீர்வு காண்பதை நீதிமன்றங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. 

வழக்கின் குற்றம் சமரசம் செய்ய இயலாதது என்றாலும் கூட அவை குடும்பத் தகராறாக இருந்தால் அவர்கள் தங்கள் தகராறை எந்தவொரு நிர்ப்பந்தமும் இல்லாமல் தீர்த்துக் கொண்டனர் என நீதிமன்றம் திருப்தி அடைந்தால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 320 வழக்கை நீதிமன்ற நடவடிக்கையை ரத்து செய்வதற்கு ஒரு தடையாக இருக்க முடியாது. இத்தகைய உத்தரவை வழக்கை ரத்து செய்வதற்கு பிறப்பிக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 482 ஐகோர்ட்டுக்கும், அரசியல் சட்டம் பிரிவு 142 சுப்ரீம் கோர்ட்டுக்கும் அதிகாரம் அளிக்கிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago