முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் கூட்டத்தொடர் 35 நாட்கள் நடைபெறுகிறது

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை மார்ச். 22 - தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 35 நாட்கள் நடக்கிறது. தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலையை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டம் முடிந்த பின்னர் அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

25-ந்தேதி இரங்கல் குறிப்புகள், மற்றும் 2013​ - 2014 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்குதல்.

26.3.13 தேதி 2013-14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம்.

27.3.13 தேதி 2013-14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம்.

28.3.13 தேதி 2013-14 ஆம் ஆண்டின் முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவைமுன் வைத்தல்.

2012-13 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையைப் பேரவைக்கு அளித்தல்.

2012-13 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி)

2012-13 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானியக்  கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு - அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் (விவாதமின்றி)

2013-14 ஆம் ஆண்டுக்கான செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி)

2013-14 ஆம் ஆண்டுக்கான செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு - அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும்,  நிறைவேற்றுதலும் (விவாதமின்றி)

2013-14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் (நான்காம் நாள்) மற்றும் பதிலுரை.

மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்:

1.4.13 - 34 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 42 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.

2.4.13 - 44 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை.

3.4.13 - 45  சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, 52 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

4.4.13 - 20 உயர்கல்வித்துறை, 5.4.13 - 5 வேளாண்மைத்துறை.

8.4.13 -  கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை), உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை).

9.4.13 - பால் வளம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை).

10.4.13 - வனம் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை) சுற்றுச்சூழல் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை)

15.4.13 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, 16.4.13- வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, 17.4.13 - கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை), 18.4.13 - கட்டடங்கள் (பொதுப்பணித்துறை), பாசனம் (பொதுப்பணித்துறை), 19.4.13 - தொழில்துறை.

22.4.13 - காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), 23.4.13 - பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை.

25.4.13 - எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), 26.4.13 - கைத்தறி மற்றும் துணி நூல் (கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை), கதர், கிராமத்தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் (கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை)

29.4.13 - வணிக வரிகள் (வணிக வரி மற்றும் பதிவுத்துறை) முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு (வணிகவரி மற்றும் பதிவுத்துறை), 30.4.13 - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை.

2.5.13 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 3.5.13 - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை) போக்குவரத்துத்துறை.

6.5.13 - சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை) தகவல் தொழில்நுட்பவியல் துறை. 7.5.13 - செய்தி மற்றும் விளம்பரம் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை), எழுதுபொருள் மற்றும் அச்சு (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை),சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை. 8.5.13 - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை. 9.5.13 - இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), 10.5.13 - பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை. 13.5.13 - வருவாய்த்துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, 14.5.13 - மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 15.5.13 - பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரரை, நிதித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்.

16.5.13 - அரசினர் சட்டமுன்வடிகள் - ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும், ஏனைய அரசினர் அலுவல்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago