முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 22 - மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. பொருளாளர்  ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனைக்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.மேலும் ஸ்டாலினின் நண்பரான ராஜாசங்கர் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது

நேற்று காலை 7.15 மணி முதல் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாலினின் வீட்டுக்கு நேற்று காலை அதிகாரிகள் 7 பேர் குழு வந்ததாகத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக் கார்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் ஒன்று ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வெளிநாட்டு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் தி.மு.க. விலகிய நிலையில் அடுத்த 2 நாட்களுக்குள் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு,    

தனிநபரை குறிவைத்து சோதனை நடத்தவில்லை என்று சி.பி.ஐ. விளக்கம் கூறியுள்ளது. 

மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க கூடாது என்றும் சம்பந்தப்பட்ட துறை மந்திரியிடம் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். 

இதையடுத்து சி.பி.ஐ. அளித்துள்ள விளக்கத்தில் எந்த தனிநபரையும் குறிவைத்து சோதனை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து விதிகளை மீறி சொகுசு கார்களை இறக்குமதி செய்ததால் அரசுக்கு ரூ.48 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று (நேற்று) 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 17 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கார் இறக்குமதி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago