முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு மக்களவை தேர்தல்: பா.ஜ.க.

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

போபால்,ஏப்.- 25 - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மக்களவைக்கான இடைக்கால தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பா.ஜ.க. பொதுச் செயலாளர் அனந்த்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  போபாலில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது, 2 ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் ஊழல், கறுப்பு பணம் போன்ற விவகாரங்களால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 5.50 லட்சம் கோடி அளவுக்கு இதன் மூலம் ஊழல் நடந்துள்ளது.
ஆனால் இவை குறித்து எதுவும் கூறாமல் பிரதமர் மன்மோகன்சிங் மவுனம் காத்து வருகிறார். அதே போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியினரிடையே அதிகரித்து வரும் கருத்து வேறுபாடும், மக்களவை இடைத் தேர்தலுக்கு வழிவகுக்கும். தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ், தி.மு.க. இடையேயான கூட்டணி முறியும். அதே போல் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடனான காங்கிரஸ் உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் குறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்கம், கேரளத்தில் அக்கட்சி தனது பிடியை இழக்கும் என்று கூறிய அவர், அதிகரித்து வரும் பணவீக்கம் குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று தெரிவித்தார். அரசியல் தரகர் நீரா ராடியாவுடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த குமார், இது போன்ற அவதூறு பரப்பியவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்