முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 2 - சென்னையில் 6 மேம்பாலங்கள்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.22 - மதுரையில் ரூ.130 கோடியில் 2 மேம்பாலங்களும், சென்னையில் ரூ.271.66 கோடியில் 6 மேம்பாலங்களும் கட்டப்பட உள்ளன. நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-  

படிப்படியாக சாலைகளின் தரத்தை உயர்த்தவும், வலுப்படுத்தவும் இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  2013- 2014 ஆம் ஆண்டில், 168 கிலோ மீட்டர் நீளமுள்ள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகள் இருவழித்தட சாலைகளாகவும், 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒருவழித்தட முக்கிய மாவட்டச் சாலைகள்,  இடைவழித் தடங்களாகவும், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்படும்.  இதுமட்டுமன்றி, 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேலும் வலுப்படுத்தப்படும்.  2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2,032 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.

2012- 2013 ஆம் ஆண்டில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 235 கோடி ரூபாய் செலவில் 121 பாலங்களை அமைக்கவும், 211.60 கோடி ரூபாய் செலவில் 433.72 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளைப் புதுப்பிக்கவும், இந்த அரசு அனுமதியளித்துள்ளது.  2013-2014 ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் உதவியுடன் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொள்வதற்காக 191.60 கோடி ரூபாயும், பாலங்கள் அமைக்கும் பணிகளுக்காக 233 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  பொள்ளாச்சி உபகோட்டத்தில் சோதனை அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தமுறை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

விரைவாகப் பயணம் செய்வதற்கு புறவழிச் சாலைகளும், மாநகர வட்டச் சாலைகளும் கூடுதலாகத் தேவைப்படுகின்றன.  தற்போது 28 புறவழிச் சாலைகளும் மூன்று வட்டச் சாலைகளும் அமைப்பதற்காக 436.08 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை கிழக்குக் கடற்கரைச்சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் 2013-2014 ஆம் ஆண்டில் தொடங்கி செயல்படுத்தப்படும். 

சென்னை மாநகரப் போக்குவரவு மற்றும் போக்குவரத்து ஆய்வுப்  பரிந்துரைகளின்  அடிப்படையில், 2013-2014 ஆம் ஆண்டில் சென்னை மாநகரத்தில் 271.68 கோடி ரூபாய் செலவில் நான்கு பெரு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.  இதுபோன்றே, 2013-2014 ஆம் ஆண்டில் மதுரை நகரத்தில் உள்ள காளவாசலிலும், கோரிப்பாளையத்திலும் 

130 கோடி பொய் செலவில் இரண்டு மேம்பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.

எனது முந்தைய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளுக்கு மத்திய அரசு மற்றும் உலக வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இத்திட்டத்தில் 8,580 கோடி ரூபாய் செலவில், 1,678 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள், மேம்படுத்தப்படும். இதுவரை மாநில அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு உதவிபெறும் திட்டங்களில் இது மிகப் பெரிய திட்டமாகும்.  இத்திட்டம், அதிக போக்குவரத்து உள்ள சாலை இணைப்புகளை தரம்  உயர்த்தி மேம்படுத்தும்.  இதற்கான பணிகள் 2013-2014 ஆம் ஆண்டில் தொடங்கப்படும்.  

மாநில நெடுஞ்சாலை வளர்ச்சி ஆணையம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்றே, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் இதன் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றை சர்வதேச தரத்தில் மேம்படுத்தி, பராமரித்து, மேலாண்மை செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படும். 

இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago