முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பு: சஞ்சய் தத் சரணடை உத்தரவு

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 22 - 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்து சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். மேலும் சஞ்சய் தத்தை ஒரு மாதத்திற்குள் சரணடையவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவர் ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் இருந்து விட்டதால் இன்னும் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

1993 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய சதிகாரர்களாக  தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவரது சகோதரர்  யாகூப் அப்துல் ரசாக் மேமன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா கோர்ட் தீர்ப்பளித்தது.

அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர். அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் யாகூப் மேமனைத் தவிர மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறையில்தான் இருக்க வேண்டும். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட யாகூப் மேமனின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இவன் சதிகாரன் டைகர் மேமனின் சகோதரர் ஆவார். 

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 2006 ம் ஆண்டில் விதித்த 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக நீதிபதிகள் குறைத்துள்ளனர். முன்னதாக சஞ்சய் தத் சட்டவிரோதமாக 9 எம்.எம். பிஸ்டல் மற்றும் ஒரு ஏ.கே - 56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது. சஞ்சய் 18 மாதங்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும். அவர் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் தற்போது மேலும் 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருக்க வேண்டும். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். இந்த தீர்ப்பை நீதிபதிகள் கூறிய போது சஞ்சய் தத்தின் கண்கள் கலங்கின. தற்போது அவர் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகள் குற்றத்தின் தன்மை கடுமையாக இருப்பதால் சஞ்சய் தத்தை விடுதலை செய்ய மறுத்து விட்டனர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்துக்கு தற்போது வயது 53. இவர் பிரபல பாலிவுட் தம்பதிகளான சுனில் தத் மற்றும் நர்கீஸ் ஆகியோரின் மகனாவார். சுனில் தத் ஒரு நீண்ட கால காங்கிரஸ்வாதி மட்டுமல்ல, மத்திய அமைச்சராகவும் இருந்தவர். அவரது மகன்தான் இந்த சஞ்சய் தத். இவருக்கு தற்போது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஒருமாதத்தில் சரணடையவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

தீர்ப்பை ஏற்கிறேன்: சஞ்சய் தத்

 

சுப்ரீம் கோர்ட் தனக்கு அளித்த தண்டனையை தான் ஏற்றுக் கொள்வதாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். இத்தகவலை அவரது வழக்கறிஞர் ஷிண்டே தெரிவித்தார். தீர்ப்பு வெளியானதும் தான் சஞ்சய் தத்திடம் பேசியதாகவும், அப்போது அவர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்தார். சஞ்சய் தத் மன உறுதி படைத்தவர் என்றும் அவரது வக்கீல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago