முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதி கைது: டெல்லியை தாக்க சதி அம்பலம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.22 - ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவனை உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் ஹோலி பண்டியை அன்று டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தான். 

கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதியின் பெயர் லியாகத் அலிகான். இவன், கோர்க்பூரில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டியிருந்தபோது கைது செய்யப்பட்டான் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. லியாகத் அலிகான் கடந்த வியாழன் அன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவனிடம் விசாரணை நடத்தியபோது ஹோலி பண்டிகையின்போது டெல்லியில் தாக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தான். மேலும் மத்திய டெல்லியில் உள்ள விருந்தினர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்களை பதுக்கிவைத்திருந்ததாகவும் தெரிவித்தான். அவன் கொடுத்த தகவலின்படி டெல்லியில் உள்ள ஜமா மஜீத் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டபோது ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்து பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago