முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ச்சிப் பாதையில் தமிழகம்: பட்ஜெட் பற்றி சரத்குமார்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.23 - வளர்ச்சிப் பாதையில் தமிழகம்  செல்லக்கூடியதாக உள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தமிழக பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் மூன்றாம் முறையாக தமிழக முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்று, நிதியமைச்சர் சமர்ப்பித்திருக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்ட அறிக்கை தமிழகத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கான சிறப்பம்சங்களைக் கொண்டு விளங்குகிறது.

இந்த பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பு ஏதும் இல்லாமல், மேலும் நடைமுறையில் உள்ள வரிகளை உயர்த்தாமல் அறிவிக்கப்பட்டிருப்பது, ஏற்கனவே மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனபாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிப்பதாக உள்ளது.

இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களைச் சுட்டிக்காட்டுவதென்றால், ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் எடுத்துரைக்க வேண்டிய அளவு கவனமாக, தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.

முத்தாய்ப்பாய்ச் சொல்வதென்றால், பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியகூட்டமைப்பாக விளங்குவது போக்குவரத்து வசதிகள் தாம். அந்த வகையில் சிறப்பான போக்குவரத்து அமைய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்னும் புதிய அமைப்பை ஏற்படுத்தி நெடுஞ்சாலைத்துறை மேம்பாட்டிற்காக 6452.77 கோடி ரூபாயும், சாலைகள் கட்டமைப்பிற்காக 2032 கோடி ரூபாயும் ஒதுக்கியிருப்பதை பாராட்டி வரவேற்கிறேன்.

மின் பற்றாக்குறையைத் தீர்த்து, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக முதல்வர் மேற்கொண்டுவரும் போர்க்கால அடிப்படை நடவடிக்கையை இந்த நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கிறது. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அரசு அறிவித்திருக்கும் புதிய திட்டங்கள் 3230 மெகாவாட் கூடுதல் உற்பத்தி அளிக்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் குறுகிய காலக்கடன் பொறுப்புகளில் 50 சதவிதம் அரசே ஏற்றுக்கொள்ளும் என்பதும் தமிழகத்தை மின்மயமாக்கும் பணிகளுக்கு வழிவகுப்பதாக அமையும். தொழில் வளர்ச்சியையும், அதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதையும் இந்த பட்ஜெட் ஊக்கப்படுவதாக அமைந்துள்ளது. தூத்துக்குடியில் பொதுத்துறை தனியார் பங்கேற்பு மூலமாக புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட இருப்பதையும் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்