பாகிஸ்தானில் பயங்கரம்: குண்டுவெடித்து 6 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மார்ச். 23 - பாகிஸ்தான் நாட்டில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த மார்க்கெட் ஒன்றில் ஒரு மோட்டார் பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஹசன் என்பவர் தெரிவித்தார். யாரை குறி வைத்து இந்த சம்பவம் நடத்தப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானை ஒட்டிய பகுதிதான் பலுசிஸ்தான். தீவிரவாதம் வலுத்துள்ள பகுதி இது. பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுபோன்ற தாக்குதல்கள் அங்கு கவலையை அதிகளவில் ஏற்படுத்தி உள்ளது. இந்நாட்டில் பொதுத் தேர்தல் மே 11 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலி எண்ணிக்கை உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. பலியானவர்கள் அனைவரும் பொதுமக்களே என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: