முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு ஆச்சரியமாக இருக்கிறது - புத்ததேவ்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஏப். - 25 - மேற்கு வங்காள அரசு  செயல்படவே இல்லை என்று பிரதமர்  மன்மோகன் சிங் கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி தாக்கி கூறியுள்ளார். மேற்கு வங்காள அரசின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக தோல்வியில் முடிவடைந்துள்ளன என்று சமீபத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார். மேற்கு வங்காளத்தில்  ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு அனைத்து அம்சங்களிலும் தோல்வி அடைந்து விட்டது என்று கூறியிருந்தார்.
இதற்கு மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களை சந்தியுங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி தனது  அரசு செயல்படவில்லை  என்று மன்மோகன் சிங் கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தனது அரசு செயல்படவில்லை என்பதை மன்மோகன் சிங் எப்போது கண்டுபிடித்தார் என்றும் தனது அரசு செயல்படுகிறதா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்காள அரசு செயல்படவில்லை என்று பிரதமர் ஒருபோதும்  தன்னிடம்  கூறவில்லை என்றும் அவர் கூறினார்.
நில வினியோகம், புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ம் அவற்றின் முன்னேற்றம் குறித்தும்  தன்னிடம் பிரதமர் அவ்வப்போது கேட்டறிந்ததாகவும் அப்படியிருக்கும் போது அவர் எப்படி இதை சொன்னார் என்றும் புத்ததேவ் கேள்வி எழுப்பினார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த மன்மோகன் சிங்  தனது கட்சியின் கொள்கை கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதை விட்டு இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது என்றும் புத்ததேவ் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்