இலங்கையை ஊக்கப்படுத்தும் அமெரிக்காவின் தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

ஜெனிவா, மார்ச். 23 - இலங்கை அரசாங்கமானது நல்லிணக்க ஆணைக் குழு மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மான விவரம் வருமாறு:-

27 ஆண்டுகால போர் முடிவுற்ற நிலையில் உண்மையான நல்லிணக்கம், தேவையான பொறுப்பேற்றல், அமைதியை நிலைநாட்டுவதற்கான தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசானது மேற்கொள்ள ஊக்கப்படுத்தும். கடந்த ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இலங்கையானது நல்லிணக்கத்தையும் பொறுப்பேற்றலையும் ஏற்க அர்த்தமுள்ள நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் சீர்குலைந்து வரும் மனித உரிமைகள் நிலைமை கவலைக்குரியதாக வளர்ந்து வருகிறது என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான அறிக்கை விளக்கியிருக்கிறது. இலங்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது. இதை ஏற்றுக் கொள்கிறோம். 

நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் என்பதை நிறைவேற்ற, இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கவலைகளை எதிர்கொள்ள நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையும் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளையும் நிறைவேற்றுவதற்காக இலங்கையை ஊக்கப்படுத்துகிறோம். இந்த முதன்மையாக பணிக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது.

மேலும் இவற்றை நடைமுறைப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தொழில்நுட்ப ரீதியான பங்களிப்பை இலங்கைக்கு வழங்க வேண்டும். சர்வதேச சமூகமானது இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு உதவ வேண்டும். இந்தத் தீர்மானத்தை மனித உரிமைகள் ஆணையம் ஏற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: