இந்தியாவின் நிலை ஏமாற்றமளிக்கிறது: கோத்தபய ராஜபக்சே

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 23 - இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் வாக்களித்தன. இதையடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கடுமையாக இருந்த இந்த தீர்மானம் தற்போது நீர்த்துப் போய் விட்டது. அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தைத்தான் இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. 

ஆனால் இதற்கும் கவலை தெரிவித்துள்ளது இலங்கை. இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே கூறுகையில், 

இந்தியா ஆதரித்து வாக்களித்தது தங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறிக் கொண்ட அவர், இலங்கை அளித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியா செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: