முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.கே. வாசனுடன் மு.க.அழகிரி - நெப்போலியன் சந்திப்பு!

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 23 - மத்திய அரசில் இருந்தும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் தி.மு.க வெளியேறிவிட்ட நிலையில் நேற்று முன்தினம் திடீரென மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனை தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, நெப்போலியன் ஆகியோர் திடீரென்று சந்தித்துப் பேசினர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறியது. தி.மு.க. வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பழநிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் தங்களின் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதன்கிழமை அளித்தனர். மு.க. அழகிரியும், மத்திய இணை அமைச்சர் நெப்போலியனும் அவர்களுடன் செல்லாமல் தனியே சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தந்தனர். பின்னர் அழகிரி மட்டும் சோனியாவையும் தனியே சந்தித்துப் பேசினார். 

இந்த நிலையில், டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் இல்லத்துக்கு மு.க. அழகிரியும் நெப்போலியனும் நேற்று முன்தினம் நண்பகல் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய விவகாரத்தில் உடன்பாடு இல்லாத அழகிரி இது குறித்து வாசனுடன் தமது கவலையைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்