முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் இலங்கை விவகாரம்: தமிழக எம்.பிக்கள் ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 23 - ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் நிலையைக் கண்டித்து தமிழக எம்.பி. க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் லோக்சபா நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று காலை லோக்சபா கூடியதும் அ.தி.மு.க., தி.மு.க.  எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். அமெரிக்காவின் தீர்மானத்தை வலுவானதாக்க மத்திய அரசு தவறி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இதேபோல் தனித் தெலுங்கானா மாநிலம் கோரி ஆந்திர மாநில எம்.பிக்களும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபையை பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடிய போதும் அமளி தொடரவே நாள் முழுவதும் சபையை ஒத்தி வைப்பதாக அவர் அறிவித்தார்.

தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி ராஜ்யசபாவில் தி.மு.க. எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். அ.தி.மு.க. வினர், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட படத்துடனான பதாகைகளை ஏந்திய படி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. மீண்டும் சபை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் ராஜ்யசபா பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago