முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்-1 முதல் இந்தியா முழுவதும் 70 லட்சம் லாரிகள் ஓடாது

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சேலம் மார்ச்.23 - டீசல் விலை உயர்வு மற்றும் 3 ஆம் நபர் காப்பீட்டு தொகையை ரத்து செய்ய கோரி ஏப்ரல் 1 ந் தேதி முதல் இந்தியா முழுவதும் 70 லட்சம் லாரிகள் ஓடாது என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று காலை நடைப்பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.கோபால் நாயுடு, செயலாளர் சண்முகப்பா, பொருளாளர் பி.மோகன், உதவி தலைவர்கள் லாரன்ஸ் பாபு,என்.பி.வேலு,எஸ்.பி.விஜித், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.நல்லதம்பி, தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேல், டூரிஸ்ட் பஸ், ஆப்ரேட்டர் சங்க தலைவர் பர்வீன், தமிழ்நாடு மேக்சி கேப் ஆப்ரேட்டர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், தென் மண்டல எல்.பி.ஜி.அசோசியேஷன் தலைவர் எம்.பொன்னம்பலம், கர்நாடகா கூட்ஸ் டிரான்ஸ் போர்ட் அசோசியேஷன் தலைவர் சிங்கால், கர்நாடகா டூரிஸ்ட் மேக்சி கேப் பஸ், ஓனர்ஸ் சங்க தலைவர் கே.ஜி.ரவீந்திரா, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்ன கேசவன், செயலாளர் தனராஜ், பொருளாளர் செந்தில் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்  லாரிகளுக்கு 1 கி.மீ.க்கு 1 டன்னுக்கு வாடகை நிர்ணயம் செய்து மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.,லாரிகளுக்கு தேசிய பர்மிட் வழங்குவதை போல் பஸ்களுக்கும் வழங்க வேண்டும்., ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் லாரிகள் செல்லும் போது நுழைவு வரி,மெக்கானிக்கல் டேக்ஸ் என்ற போர்வையில் வசூல் செய்யப்படுவது ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது.3 ஆம் நபர் காப்பீட்டை 1.4.2013 முதல் 107 சதவீதத்திற்கு மேல் உயர்த்தி உள்ளதை கண்டித்து, அதனை ரத்து செய்யக் கோரியும்,  ஆயில் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் தன்னிச்சையாக டீசல் விலை ஏற்றம் அறிவிப்பதை நிறுத்தி மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரசின் முடிவின்படி 1.4.13 நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுமார் 70 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது. அன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago