இங்கிலாந்தில் வெளுத்து வாங்கும் மழை, பனிப்புயல்

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கோடை காலம் துவங்க இன்னும் ஓரிரு வாரங்கள் தான் உள்ளன. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் கன மழையும், பனிப் புயலுமாக உள்ளது. வடக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் பனிப்பொழிவால் 40 சென்டிமீட்டர் அளவுக்கு பனிப்படலம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழையுடன், பனிப் புயலும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப் புயல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரலாம் என்றும், தென்மேற்கு பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேவோன், கார்ன்வால் ஆகிய இடங்களில் கொட்டித் தீர்த்த மழையால் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மேலும் லீட்ஸ் விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

வடக்கு வேல்ஸ், தெற்கு ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகியவை இன்று பனிப் புயலால் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: