முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலில் ஒபாமா சுற்றுப்பயணம்! காசாவிலிருந்து ஏவுகணை தாக்குதல்!!

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

டெல் அவிவ்: மார்ச் - 24 - இஸ்ரேலில் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அந்நாட்டின் எல்லைகளில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேல் நாட்டில் 2-வது நாளாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் தெற்கு இஸ்ரேல் எல்லைப் பகுதியில் தேரோட் நகரத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காசா பகுதியிலிருந்து நடத்தப்பட்டதாகக் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதலில் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளில் ஒன்று எல்லைப் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் முன்பும் மற்றொன்று திறந்த வெளியிலும் வெடித்திருக்கிறது.. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஒபாமா இன்று பாலஸ்தீனதில் உள்ள ரமல்லா பகுதியில் ஏசு கிறிஸ்து பிறந்த இடத்தை நேரில் சென்று பார்க்க இருக்கும் நிலையில் தாக்குதல் நடந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago