முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிருக்குஆபத்து இருந்தாலும் நாளைபாக். திரும்புவேன்: முஷாரப்

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்: மார்ச் - 24 - தமது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் திட்டமிட்டபடி நாளை நாடு திரும்புவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் அதிபரானார். அவர் பதவியில் இருந்த காலத்தில் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் முஷாரப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் தலிபான்களுக்கு எதிராகவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டார். இது போன்ற சம்பவங்களால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு பாகிஸ்தானைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் முதலில் தஞ்சமடைந்தார் முஷாரப். பின்னர் இங்கிலாந்து சென்றார். இந்த நிலையில் பாகிஸ்தானில் மே 11-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தாம் போட்டியிடப் போவதாகவும் தமது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கை வெற்றி பெறச் செய்வதற்காகவும் நாடு திரும்புவேன் என்று அறிவித்திருந்தார். இதற்காக தம் மீதான வழக்குகளில் அவர் முன் ஜாமீனும் பெற்றிருக்கிறார். ஆனால் முஷாரப் நாடு திரும்பினால் அவர் படுகொலை செய்யப்படுவார் என்று தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், முஷாரப்பை படுகொலை செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முஷாரப்பை நெருங்கிவிட்டனர். நிச்சயம் அவர் படுகொலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் தாம் திட்டமிட்டபடி நாளை நாடு திரும்பப் போவதாக அறிவித்திருக்கிறார். ாஎனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது தெரியும். இதை உணர்ந்திருக்கிறேன். இருப்பினும் நிச்சயம் நாடு திரும்பி தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago