முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை மீண்டும் உயர்வு

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச் - 24 - டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) விலை உயர்வுக்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 45 காசுகள் உயர்த்தப்பட்ட போதும், உள்ளூர் விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரி சேர்க்கப்படும். இதன் மூலம் புது டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகளும், மும்பையில் 57 காசுகளும், கொல்கத்தாவில்  53 காசுகளும், சென்னையில் 55 காசுகளும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.51. 23 லிருந்து ரூ.51.78 ஆக உயர்ந்துள்ளது.  எண்ணெய் நிறுவனங்கள்  டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள்  உயர்த்திக்கொள்ள, மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அனுமதியளித்தது. இதையடுத்து இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்