முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானை சுட்டவழக்கு: நேரில் ஆஜராக சல்மான், தபு, சோனாலி,

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

ஜோத்பூர்: மார்ச், - 24 - அரிய வகை உயிரினமான கறுப்பு மானைச் சுட்ட வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சல்மான் கான் மற்றும் நான்கு நடிகர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன் ஹம் சாத் சாத் ஹெய்ன் பட ஷூட்டிங்கின்போது, மான் வேட்டைக்குப் புறப்பட்டனர் சல்மான் கானும் உடன் நடித்த தபு, சோனாலி பிந்தரே, நீலம் மற்றும் சாயிடிப் அலி கான் ஆகியோரும். அப்போது கருப்பு மான் எனும் அரிய வகை மான் இரண்டை சுட்டுக் கொன்றனர். இதனை அந்தப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். சல்மான் மற்றும் உடனிருந்த அனைத்து நடிகர் நடிகையர் மீதும் வழக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த டிசம்பரில் மேலும் கடுமையான பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகர்கள் அனைவரும் ஜோத்பூருக்கு விரைந்துள்ளனர். ஆனால் சல்மான் கான் அமெரிக்காவில் இருப்பதால் வரவில்லை. நாளை நிச்சயம் வந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கில் சல்மான் கானின் குற்றம் உறுதியானால் அவர் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். அவருடன் வேட்டைக்குப் போன தபு, சோனாலி, நீலம் மற்றும் சாயிப்புக்கும் இதுதான் கதி.இந்த வழக்கில் முக்கிய சாட்சி, சல்மான் உள்ளிட்ட நடிகர்களை ஜீப்பில் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்தான். ஆனால் அவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார்.
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக பிரிவு 148ல் சல்மான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ராஜஸ்தான் நீதிமன்றம் நீக்க முடிவு செய்தது. ஆனால் இதனைத் தடுத்த உச்சநீதிமன்றம், சல்மானை அந்தப் பிரிவின் கீழும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago