முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்:

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 24 - இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்றைய நிலையில், உலகமெங்கும் வாழும் தமிழர்களும் மரண பூமியில் வதைப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களும், தாய்த் தமிழகத்து மக்களும், குறிப்பாக மாணவர் உலகமும் வேண்டுவதெல்லாம் சுதந் திரத் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பும், இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையும் தான். தமிழ் ஈழ தேச விடுதலை என்பது வரலாற்றில் நிகழ்ந்தே தீரும். அதனை விரைவு படுத்துவதும், அதற்குத் தோள் கொடுப்பதும் தொப்புள் கொடி உறவு தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டின் தலையாய கடமையாகும். தமிழக முதல்வர் இதற்கான ஒரு தீர்மானத்தை சட்ட மன்றத்தில் கொண்டுவந்து சரித்திரத்தில் அழியாத புகழ் தரும் கல் வெட்டாக ஆக்கித்தர வேண்டுகிறேன். இலங்கைத் தீவின் தமிழர் தாயகத்தில் அக்கிரமமாக கடந்த 60 ஆண்டுகளில் திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் வெளியேற்றப்படவும், தமிழர்களை துன்புறுத்தி வதைக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவமும், போலீசும் வெளியேற்றப்படவும், தமிழர் வழிபாட்டுத் தலங்களின் அருகே அமைக்கப்பட்டுள்ள பெளத்த விகாரைகள் அகற்றப்படவும் வேண்டும். சிங்களச் சிறைகளிலும், வதை முகாம்களிலும் விசாரணையின்றி அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுவிக்கவும், வீடு வாசல் இழந்து உணவுக்கும், மருந்துக்கும் வழியின்றி துயர்படும் ஈழத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களும், ஐ.நா.மன்றமும் நேரிடையாக நிவாரணம் வழங்க வழிவகை செய்யவேண்டும். இனப்படுகொலை செய்த சிங்கள ராஜபக்சே அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெறச் செய்யவும், போராடி விடுதலை பெற்ற பல நாடுகளில் அமைக்கப்பட்டது போன்ற ஒரு இடைக்கால நிர்வாகத்தை  ஈழத் தமிழர்களைக் கொண்டே செயல்படுத்துவதற்கான ஏற்பாட்டை ஐ.நா.மன்றம் மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. சபையின் மனித உரிமை பிரகடனம் அங்கீகரித்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், ஈழத் தமிழர் தாயகத்தில் உலக நாடுகள் மேற்பார்வையில் இறையாண்மையுள்ள சுதந்திர ்ழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடைபெறச் செய்யவும், உலகத்தின் பல நாடுகளில் வசிக்கின்ற புலம்பெயர்  ஈழத் தமிழர்கள் அத்தகைய பொதுவாக்கெடுப்பில், அந்தந்த நாடுகளிலேயே தங்களது வாக்கை பதிவு செய்தல் வேண்டும். இவற்றையெல்லாம் ஐ.நா. மன்றம் அதற்கான உரிய ஏற்பாட்டை செய்யவும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை முதல்வர் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன். வரலாற்றின் பக்கங்களில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தொடர்ச்சியாக வடிக்கப்படும் புதிய பரிமாணமாக அத்தீர்மானம் சரித்திரத் திருப்பமாக அமையும் ஈழத்தமிழர் பிரச்சினையில் 2011 ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை உள்ளிட்ட சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர், துன்ப இருளிலே இருந்து ஈழத்தமிழர்களை மீட்டு அவர்களுக்கு விடியலைத் தரும் தீர்மானத்தை சட்ட மன்றத்தில் நிறைவேற்றிட வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்